பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரி வேலைக்குச் சென்ற மாற்றுத்திறனாளி மர்மமான முறையில் மரணம்


பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரி வேலைக்குச் சென்ற மாற்றுத்திறனாளி மர்மமான முறையில் மரணம்

 போலீசார் விசாரணை

 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உ


ள்ள மோளையானூர் பகுதியை சார்ந்தவர் சேட்டு வயது 60 மாற்றுத்திறனாளி 

 இவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏரி வேலைக்கு தினசரி கூலியாக வேலைக்குச் சென்று வந்தார்

 வழக்கம் போல மோளையானூர் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் நீர் குட்டைகள் அமைக்கும் பணி செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்

 இதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர்

  உடனடியாக அங்கிருந்து சகத் தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர், உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிந்த உடலை அந்த வண்டியில் எடுத்து வரக்கூடாது என்பதால் அங்கிருந்து வெளியேறி விட்டனர் 

இதை அடுத்து அங்கிருந்து சகத் தொழிலாளர்கள் அரசு அமரர் ஊர்த்தி வருவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் அப்பகுதியில் இருந்த தனியார் சொர்க்க ரதம் வாகனம் மூலமாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்

 சம்பவம் குறித்து இறந்து போன சேட்டுவின் மகன் சதீஷ் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தனது தந்தையின் மரணம் குறித்து புகார் தெரிவித்தார்


  இறந்து போன மாற்றுத்திறனாளி சேட்டு  மரணம் குறித்து அப்பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கையில்


 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் போது வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி அடிப்படை வசதிகளோ செய்து தருவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்


 இந்த 100 நாள் வேலை  திட்டத்தில் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கின்றார்

 இறந்து போனவர் வெயிலின் தாக்கத்தின் காரணமாக இருந்தாரா? அல்லது விஷ செடிகள், விஷ ஜந்துக்கள் தீண்டியதால் இறந்து போனாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments