சந்திரன் யூவா பவுண்டேஷன் அமைப்பின் சார்பாக வசி கிளினிக் எனப்படும் இலவச பொது மருத்துவ சேவை மையத்தின் துவக்கவிழா நடைபெற்றது

கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த செட்டிபாளையம் சாலையில், இன்று, சந்திரன் யூவா பவுண்டேஷன் அமைப்பின் சார்பாக வசி கிளினிக் எனப்படும் இலவச பொது மருத்துவ சேவை மையத்தின் துவக்கவிழா நடைபெற்றது





கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த செட்டிபாளையம் சாலையில், சந்திரன் யூவா பவுண்டேஷன் அமைப்பின் சார்பாக பல்வேறு பொது சேவைகளை பொதுமக்களுக்காக இலவசமாக முன்னேடுத்து வருகின்றனர்,  குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மற்றும்  திருநங்கைகளுக்கு, பல்வேறு தொழில் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வை மேம்பட செய்து வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில், இன்று சந்திரன் யூவா பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர் சசிகலா தலைமையில், வசி கிளினிக் எனப்படும் இலவச பொது மருத்துவ சேவை மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இந்த மையத்தை ராவ் மருத்துவமனையின், இயக்குநர் ஆஷா ராவ், மருத்துவர் பழனிச்சாமி, ஆகியோர் ரிப்பன் வெட்டி வைத்தும், குத்துவிக்கேற்றி வைத்தும் திறந்து வைத்தனர், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, மருத்துவர்கள், கங்கா, காயத்ரி, வினோத் ராஜ்குமார், ராஜ சண்முக கிருஷ்ணன், திலிப், விஜயகுமார், சாரதா பழனிச்சாமி, என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments