ஏப்-13 ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு திமுக ஒன்றியத்தில் செயல்வீரர்கள் கூட்டம் பி. எஸ் சரவணன் திமுக தொண்டர்களுக்கு அழைப்பு

வருகின்ற (13-04-2023), வியாழக்கிழமை காலை 10-00 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பையர்நத்தம் கதிரிபுரம் ரோட்டில்   அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ஒன்றிய அவைத்தலைவர் திரு.N.கார்மேகம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்டக் கழக செயலாளர் –  பி.பழனியப்பன் அவர்களும், பாப்பிரெட்டிப்பட்டி  தொகுதி தலைமையில், 
மாநில தொண்டரணி துணை செயலாளர் உயர்திரு எஸ்.எம்.அன்பழகன் அவர்கள், மற்றும் 
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதியதாக கழக உறுப்பினர்களை சேர்த்தல், வாக்கு சாவடி பணிக்குழு அமைத்தல் பணிகளை ஆய்வு செய்து சிறப்புரையாற்றுகிறார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட,ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
அதுசமயம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சி பொறுப்பாளர்கள், BLA-2 முகவர்கள்,  கிளைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ் சரவணன் கேட்டுகொண்டார்.


Comments