சென்னையில் பெரும்பாலான இடங்களில் பிள்ளைகளை விட்டுவிட்டு தனிமையில் வசிக்கும் வயது வந்த தம்பதியினர் வாழ்ந்து வரும் நிலையை பார்த்தால் தற்போது இருக்கும் பெற்றோர்களின் மனம் பெரும் அதிற்ச்சிக்குள் இருந்து வருகிறது. சில பேர் வீட்டை கோபித்து கொண்டு வந்துவிடுகின்றனர். கால சூழல் மாறி வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் உணவின்றி, இடமின்றி, ஆரோக்கியமான நிலையை மறந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் பல்வேறு சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் பல பேர் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கிடைக்காமலும் மானத்தை மறைக்க ஆடைகள் இல்லாமலும் வாழ்ந்து வருவது பல சமூக ஆர்வலர்களுமக்கும் சமூகத்தை நேசிக்கும் காவலர்களுக்கும் தெரியாமல் போய்விடுகிறது. ஆயினும் இது போன்ற ஏழனமான ஒரு சில நேரத்தில் ஒரு சில காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் உடைத்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக சென்னை சிந்தாதரி பேட்டையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் ஆனந்தி என்பவர் சாலையோரம் கிழிந்த ஆடையில் 75 வயதுதக்க அம்மாவை கண்டு உடனடியாக அவருக்கு புதிய ஆடையினை கொடுத்து காவலர் காப்பகத்தில் ஒப்படைத்தார். இந்த காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தியை பற்றி கேட்கும் போது ஏற்கணவே கொரோனா காலகட்டத்தில், மற்றும் மழையின் போது சென்னை ஓல்டு கமிஷனர் அலுவலகம் எதிரில் கெனட லைன் உள்ள மகாபோதி புத்தர் மடம் அருகே கழிவு நீர் அவ்வபோது கசிந்து வருவதால் புத்தர் சிலை மடத்திற்கு சுற்றுலா பயணிகளாக வரும் வெளிநாட்டினர், இலங்கை மக்கள் , போன்ற பார்வையாளர்கள் பெரும் அளவில் பாதித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் தலைமை காவலர் ஆனந்தி அவர்கள் தங்களின் சக காவலர்களுடன் சேர்ந்து வெளியே வரும் கழிவு நீர் சாக்கடையை கால்வாயை சீரமைத்தார். இந்த சம்பவப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் அப்பகுதி மக்களும் , நெட்டிசங்களும், காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் தற்போதுள்ள காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தி அவர்கள் மக்களிடத்தில் பாராட்டை பெற்றுள்ளார்.
Comments
Post a Comment