தர்மபுரியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


தர்மபுரியில் இன்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரூபாய் 36 கோடி மதிப்பில்  கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினர். 


தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தர்மபுரியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டடம் கட்ட அறிவித்தார் அதன்படி கட்டிடம் கட்ட சுமார் 4.25 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து தளங்கள் கட்ட ரூபாய் 36 கோடி 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணியினை இன்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

இதேபோல் தர்மபுரி ஏஎஸ்டிசி நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் பசுமை பூங்காவை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்மபுரி நகராட்சி உட்பட்ட புறநகர் பேருந்து நிலையங்களை ரூபாய் 1.34 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புறணமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நகர் மன்ற தலைவர் லட்சுமி நகராட்சி ஆணையர் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Comments