கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று கோவை மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,


கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று கோவை மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று கோவை மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,  இதுவரையிலும், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக ஆர் ஆர் மோகன் குமார், இருந்து வந்தார், தற்போது கோவை மாவட்டத்தின் புதிய மாநகர் மாவட்ட செயலாளராக செல்வராஜ் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார், இந்நிலையில் இவரது தலைமையில், புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியானது அவைத்தலைவர் சேதுபதி தலைமையில், முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன் குமார், மற்றும் உயர்நிலை குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் முன்னிலையில், நடைபெற்றது, முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டு வீர முழக்கங்கள் எழுப்பப்பட்டது, இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் செயல்பாடுகள், மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க பட்டது, இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கிருஷ்ணன், மதிமுக கவுன்சிலர்கள், சித்ரா வெள்ளியங்கிரி, சித்ரா தங்கவேலு, தர்மராஜ் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments