கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் துதுவர்கள் உச்சி மாநாடு 2023 நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார்

கோவை குனியமுத்தூர் பகுதியி்ல் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு 2023 எனும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, மற்றும், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், மற்றும் கெளரவ விருந்தினராக மாநாடு சார்பாக அமிதாப் காந்த், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா என பலரும் கலந்து கொண்டனர், இந்த மாநாட்டில் ஜி 20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயண்படுத்து பவர்களுக்கான கூட்டு கல்வி முறை என்ற தலைப்பின் கீழ், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதனை தொடர்ந்து பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பில், மருத்துவரும் சாந்தி ஆஸ்ரம இயக்குனருமான  வினு அறம், குப்புசாமி நாயுடு மருத்துவமனை மருத்துவர் சண்முக பிரியா, மற்றும் திரைப்பட நடிகை கெளதமி க்கு பாராட்டு விழா மற்றும் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Comments