ஆளுங்கட்சி வி ஐ பி க்களால் கூட்ட நெரிசலில் திணறிய தீர்த்த்தமலை பக்தர்கள் , முதல்வர் கவனத்திற்கு !.. Only Evidence
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தீர்த்தகரிஷ்வரர் ஆலயத்தின் மாசிமக தேர்த்திருவிழா நடைபெற்றது.
இத்தேர் திருவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், மற்றும் தீர்த்தமலை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் சுமார் 223 காவலர்களும், 6 காவல் ஆய்வாளர்களும், 1 மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளரும், 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அத்தனை காவல் துறையினரும் உயிரை பணைய வைத்து கூட்ட நெரிசலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கும் மக்களுக்கும் தலைவலியை ஏற்படுத்தும் நோக்கில் பக்தர்களும் மக்களும் தேரை இழுத்து வர தேர் பின்னாடியே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி,பழனியப்பன் அவர்களும் தங்களது சொந்த வாகனங்களை எடுத்து வந்து தனது அரசியல் அதிகாரத்தை காட்ட நினைத்ததால் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு கோவில் வாசலில் இருந்த குழியில் விழுந்து எழுந்து சென்றனர்.
இதனை கண்ட பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா அவர்கள் பின்னாடி வர காரை நிறுத்துங்கள் என்று சக காவலர்களிடம் சொல்லி அங்கிருந்த மக்களை கையிர்களின் மூலம் வளையம் போட்டு தனது கட்டுபாட்டில் கொண்டுவந்தார். அப்போது மக்கள் சற்று காத்திருந்த நிலையில் மீண்டும் தருமபுரி திமுகு மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் உடன் வந்த பொண்மனி என்பவர் காவல் ஆய்வாளர் லதா அவர்களிடம் சென்று யேதோ ஒன்று சொல்ல, அதற்கு பதிலடியாக கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணுங்க என்று பதில் வந்ததோ தெரியவில்லை தலையை சொரிந்து பொண்மணி பின்னோக்கி வந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தனது காரை விட்டு இறங்கி எல்லாத்தையும் போக சொல்லுங்க போக சொல்லுங்க என்று சொல்ல கோவிலின் மேற்கு வாசலில் இருந்து வேகமாக வந்த கோட்டபட்டி காவல் ஆய்வாளர் சிவகுமார் அவர்களும் களத்தில் இறங்கி முக்களை பத்திரமாக கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் வழியை விடுங்க என்று கூறி மக்கள் செல்லும் குறுகிய வழித்தடத்தில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் காரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்களுடைய காரும் அதற்கு பின்னால் வரிசை கட்டி 4 காரும் தொடர்ந்து வந்ததால் மக்கள் பெரும் கோபத்த்திற்குள்ளாகி அங்கே ஆபாசமாக பேச தொடங்கி விட்டனர். கை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பெண்கள், என்று பல்வேறு மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் இன்னலில் இருக்கும்போது இறக்கமில்லாத இவர்களெல்லாம், மக்களுடைய சூழ்நிலையை புரிந்துகொள்ளாத இவர்களெல்லாம் மக்களுக்கு என்ன உதவி செய்ய போகிறார்கள், காவல்துறை அதிகாரிகள் மிக சிரமமான
முறையில் மக்களை காக்க முயற்சிக்கும் போது உங்களில் ஒருவன் நான் என்று சொல்லும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்குள் இவர்கள் என்ன செய்யா போறாங்க எல்லாம் அதிகாரம், பண பலம் என்று கீழே இருக்கும் பக்கதர்கள் புலம்பி கொட்டினர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்கும் போது தேர் வரும் பாதையில் ஒரு சில நபர்கள் ஆக்கரிமிப்பு செய்துள்ளனர்.
ஒரு சில அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். தேர் வரும் பாதையில் கார் வந்தது எங்களுக்கு தெரியாது. காரை வெளியே நிறுத்தி விட்டு வந்திருந்தால் பக்தர்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி கோவில் வாசலை கடந்து சென்றிருப்பார்கள் இதெல்லாம் அவர்களுக்கே புரியவேண்டும் நாங்க சொன்னா கேக்கவா போறாங்க எல்லாம் ஆளுங்கட்சி ! என்று முடித்து விட்டு நாங்க சொண்ணனும் சொல்லிராதிங்க ன்னு பயந்து தனது கருத்துக்களை கூறி கடந்தார்கள் கோவில் நிர்வாகிகள்,
Comments
Post a Comment