அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் களப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது

அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் களப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி களப்பயண நிகழ்ச்சி 27-02-2023 இன்று முற்பகல்10.30 மணி அளவில் தொடங்கியது. அனைத்து மாணவர்களையும் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் பள்ளி மாணவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த பணிகள் ஆய்வகம் நூலகம் ஆகிய இடங்களை மாணவர்களுக்கு பேராசிரியர் விளக்கி உரைத்தனர். கள ஆய்வு முடிந்து கல்லூரி கலையரங்கத்தில் பாடப்பிரிவுகள் வேலை வாய்ப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் குறித்து விழிப்புணர்வு பிற்பகல் 12 .00 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் டி .கே. சித்திரை செல்வி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் வே. அன்பரசி அவர்கள் கல்லூரி பற்றி அறிமுக உரையை நிகழ்த்தினார்.
                கல்லூரியில் தமிழ், சமூகவியல், ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல் போன்ற துறைகள் செயல்படுவதனை துறை தலைவர்கள் முனைவர் பொ. செந்தில்குமார், முனைவர் இரா. புருஷோத்தமன், முனைவர் வே.பசுபதி, முனைவர் வெ.சங்கீதா , முனைவர் இரா ஜெயராமன், முனைவர் வி.இரவி ஆகியோர் தமது கல்லூரியில் உள்ள துறைகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் பெரும் வேலை வாய்ப்புகளைப் பற்றி எடுத்துரைத்தனர். இன்றைய மாணவ சமுதாயத்திற்கு உடற்கல்வி அவசியம் என்பதை உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு )திரு த. அருண் நேரு எடுத்துரைத்தார். கல்லூரியில் உள்ள நூலகம் மாணவர்களின் கல்வியறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று நூலகர் முனைவர் கி.ச. கல்யாணி எடுத்துரைத்தார். கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், சிறப்பாக செயல்பட்டு மாணவர்களை ஆளுமைத்  தன்மை கொண்டவர்களாக மாற்றுகிறது என்பதை திட்ட அலுவலர்கள் எடுத்துரைத்தனர். கல்லூரி நிதியாளர் மாணவர்கள் மத்திய, மாநில கல்வி உதவித்தொகை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜாஜி அறக்கட்டளை, போன்றவற்றில் உயர்கல்வியின் கல்வி உதவித்தொகை பெற இக்கல்லூரி முனைப்போடு செயல்படுவதை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறை மாணவர்கள் எரிகண்டா சூரன் வதம் தெருக்கூத்து நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்வில் பள்ளி கல்வி துறை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக முனைவர் பொ. செந்தில்குமார், தமிழ்த்துறைத் தலைவர் நன்றி உரை கூறினார்

Comments