கோவை கொலையாளிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல், 23. மனோஜ், 25. ஆகிய இருவரும் 2021ம் ஆண்டு, கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஸ்ரீராம், 22 கொலை வழக்கில் கைதானவர்கள் ஆவர்.  அப்படி இருக்க கோகுலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

 இந்நிலையில் நேற்று காலை கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு, நண்பர் மனோஜ் உடன் கோகுல் வந்தார். கோர்ட்டில் கையெழுத்திட்டு வெளிய வந்த போது மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால், கோகுலை சரமாரியாக வெட்டினர்.  அதில் கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். தடுக்க சென்ற மனோஜூக்கும் வெட்டு விழுந்தது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா, கவுதம், உன்னிகிருஷ்ணன், கவாஸ்கான் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் அருகே குற்றவாளிகள் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது இருவர் தப்பியோட முயன்றனர்.அவர்களை போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியது, கோவை கோர்ட் கொலை சம்பவத்தில் 5 பேரை கோத்தகிரி போலீசார் மேட்டுப்பாளையத்தில் வைத்து கைது செய்தனர். இவர்களில் கவுதம், ஜோஸ்வா தங்களுக்கு வாந்தி வருவதாக கூறி தப்பியோட முயன்றனர். அவர்களை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க நேரிட்டது என்றார்.

Comments