செங்கல் சூளை அதிபரால் பெண் கடத்தல் சம்பவம் -
காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தப்பட் தருமபுரி சம்பவம்
___________________________________________________________________________
தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டம்
பெரியாம்பட்டியை அடுத்த ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சார்ந்த லட்சுமி(50) மற்றும் மகன் முத்து (35) இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணமலை சாலையில் உள்ள ஆலமரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் செங்கல் ஆளை அதிபர் - PCSP என்னும் பெயரில் செங்கல் உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருகிறார் .
இவரிடம் கடந்த 1 வருடத்திற்கு முன்பு 2.68 000 அட்வான்ஸ் தொகை பெற்றுக்கொண்டு தாயும் மகனும் வேலை செய்து கடனை கழித்து வந்துள்ளனர் இந்நிலையில் கடந்த பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு வந்த லட்சுமி உடல்நிலை சரியில்லாமல் போனது வேலை செய்யும் இடத்தில் இருந்து போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார் அதற்கு உடல் நிலை சீரானதும் வருவதாக கூறி இருக்கிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளாத செங்கல் சூளை உரிமையாளர் இன்று மாலை 5 மணி அளவில் அடியாட்களுடன் வந்து மிரட்டி அடித்து டாடா சுமோ வாகனத்தில் லட்சுமியை கடத்தி சென்று உள்ளனர் . மேலும் 5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்று உள்ளனர் .இதனால் பதட்டம் அடைந்த மகன் முத்து உறவினர்களுடன் தற்பொழுது தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment