பாலக்கோடு அருகே சரக்கு மினிலாரி மலைபாதையில் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்பறாக கவிழ்ந்த விபத்தில்- ஒருவர் உயிரிழப்பு 40 பேர் படுகாயம் போலீசார் விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெல் மலைகிராமத்திலிருந்து பாலக்கோடு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது மலைபாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி தலைக்குப்புறாக கவிழ்ந்த விபத்தில் சென்னசத்திரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (60) என்பவர் உயிரிழப்பு.
மேலும் வாகனத்தில் வந்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்து கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment