உத்தங்கரை ரெட்டிப்பட்டி அருகே 16 க்கும் 30க்கும் திருமணம் , கண்டும் காணாமல் போன மகளிர் காவல் நிலையம் !!! சொம்பு தூக்கும் தாசில்தார் !!!!
உத்தங்கரையில் (16- 30 ) குழந்தை திருமணம் கண்டும் காணாமல் இருக்கும் ஊ்த்தங்கரை மகளிர் காவல் துறை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிபட்டி பகுதியில் நேற்று தமிழ்வாணன் மகளாகிய ( சித்ரா பெயர் மாற்றம்) 16 வயது அதே ஊரை சேர்ந்த சிலம்பரசன் வயது 30 கொண்ட இளைஞருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தாசில்தார் அவர்களிடம் தகவல் எப்ப நடந்தது நீங்க பார்த்தீங்களா சரி நான் பாத்துகிரேன்னு சொல்லிவிட்டு நீங்க எந்த பத்திரிக்கை என்று கேட்டார், பிறகு செய்தியாளர் தரப்பில் இருந்து தாசில்தார் ஐயாவின் பெயர் என்ன என்று கேட்கும் போது எதுக்கு என்று விவாதம் வைத்தார்.
இப்படி இருந்தால் எப்படி அரசு அதிகாரிகளுக்கு செய்தியாளர் தரப்பில் தகவல் தெரிவிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசும்போது சரியான முறையில் தகவல் இல்லை.
இதுபற்றி ரெட்டிபட்டி அப்பகுதியில் வசிக்கும் கிராம அலுவலர், மற்றும் ஊர் தலைவர்கள் பஞ்சாயத்து பேசி திருமணத்தை முடித்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி ஊத்தங்கரை காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில காவல் அதிகாரிகளுக்கும் தெரிந்து நடந்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.இது போன்ற குழந்தைகள் திருமணம் நடைபெற்றால் எதிர்காலத்தில் பள்ளி குழந்தைகளும் திருமண ஆசைக்கு தள்ளப்படும் நிலை உருவாகும் என்பதை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் உணர்ந்து கொண்டு , குழந்தைகள் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்கு சம்பத்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரெட்டிபட்ட மக்களின் குற்றச்சாட்டு
Comments
Post a Comment