மாநில அளவிலான இயற்கை ஆர்வலர்களுக்கான கூடல் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கும் விழா

மாநில அளவிலான இயற்கை ஆர்வலர்களுக்கான கூடல் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கும் விழா

தமிழக மாநில அளவிலான இயற்கை ஆர்வலர்களுக்கான சந்திப்பு மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கும் விழாவானது தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டியில் அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது‌.

         மாநில அளவிலான மரம் நடுதல், இயற்கை வளங்களை காத்தல், பனை விதை நடுதல், இயற்கை வேளாண் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் இயற்கை ஆர்வலர்களுக்கான கூடல் விழாவாக நடைபெற்று 2022ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வை தருமம் அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

     தமிழகம் முழுவதும் சிறப்புற இயற்கை பணி மேற்கொள்ளும் 110 நபர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தகடூர் ந.பிறைசூடன் க்கு இவ்விருது வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தருமபுரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி. வெங்கடேஸ்ரன் மற்றும் மருதம் நெல்லி கல்வி குழுமத் தலைவர் முனைவர்.கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். தமிழக அரசின் பசுமை விருது பெற்ற சந்தூர் அரசுப்பள்ளி ஆசிரியர் பசுமை நாயகன் சங்கர், பசுமை & கல்வி அறக்கட்டளையின் மகேந்திரன், தருமம் அறக்கட்டளையின்  சின்னமுத்து மற்றும் டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளையின் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Comments