போக்ஸோ சட்டத்தில் சம்பந்தப்படாதவர்களையும் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டி பணம் வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்:-
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அதில் சம்பந்தப்படாதவர்களையும் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டி பணம் வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்:-
மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் அப்பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் பல மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சீனிவாசன் என்பவர்மீது அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்பில்லாதவர்களையும் வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா பள்ளி நிர்வாகத்திடம் ரூ.50,000 பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர் சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்
Comments
Post a Comment