பெங்களரூவிலிருந்து ஒருநாள் டிரிங்க்ஸ் வராவிட்டால் தமிழகம் முடிந்துவிடும்.. கனிமவளங்கள் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படுவது குறித்த கேள்விக்கு சண்முகப்பா பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், கல்குவாரிகள் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது
அப்போது பேசிய அகிய இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா:
கொரட்டகிரி கிராமத்தில் 25 ஆண்டுகளாக கைகளில் கற்கள் வெட்டுவது தொடங்கி தற்போது இயந்திரங்கள் மூலம் வெட்டுகிறோம்.. நாட்டின் வளர்ச்சிக்காக ஏற்ப்படுத்தப்பட்டதுதான் கிரஷர்கள், நாட்டின் பொருளாதாரத்திற்காக 25% வரியை செலுத்தி வருகிறோம்.. தற்போது கொரட்டகிரி கிராம மக்கள் கல்குவாரிக்கு எதிராக போராட்டங்களை மேற்க்கொண்டதாலேயே நீதிமன்றம் அணுகினோம் நீதிமன்றம் அகில இந்திய நாடு முழுவதும் சாலைகளில் போக்குவரத்து இல்லை என்றால் நாடு ஸ்தம்பிக்கும் எனக்கூறியதுடன் அனுமதி வழங்கியிருப்பதால் நீதிமன்ற உத்தரவை ஏற்று அதிகாரிகள் கல்குவாரி நாளையே செயல்பட அனுமதிக்க வேண்டும், கல்குவாரிகளை நம்பி 40 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாக கூறினார்.. மாவட்ட கலெக்டர்,எஸ்பி,தாசில்தார் அவர்களை வேண்டிகொள்கிறேன் என்றார்
தமிழக கனிமவளங்களை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படுவது குறித்த கேள்விக்கு:
ஜல்லி கற்கள் கர்நாடகா மாநிலத்திற்கு வழங்குவதற்கான உத்தரவு உள்ளன. கனிமவளங்கள் மத்திய அரசிற்கு சம்பந்தப்பட்டவை, அப்படி நினைத்தால் அங்கிருந்து வரக்கூடிய நெல்,சோளம்,மக்காச்சோளம் உள்ளிட்டவை நின்று விடும் கூட்டு அரசாங்கம் என்பதால் பண்டமாற்று முறையில் வாங்கி கொள்ளலாம்
பெங்களூருவிலிருந்து ஒருநாளைக்கு டிரிங்க்ஸ் வராவிட்டால் தமிழகம் முடிந்து விடும் என்றார்.
ஒசூர் அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் 7 கல்குவாரிகளின் கனரக வாகனங்கள், கொரட்டகிரி கிராம ஊருக்குள் வருவதால் சுற்றுச்சூழல் மாசு, விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் ஊரை காலி செய்து வனப்பகுதியில் கூடாரங்களை அமைத்து 8 நாட்களாக போராடியதன் விளைவாக இனி ஊருக்குள் லாரிகள் வராது என வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தநிலையில்,
கல்குவாரி நிர்வாகத்தினர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது
Comments
Post a Comment