மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் காட்டு யானை தாக்கி மாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் காட்டு யானை தாக்கி மாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதகையை அடுத்த மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் இரவு சுமார் 8 மணியளவில் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மாவனல்லா அருகில் உள்ள சோகப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் மாதன் ( 46) என்பவர் சாலையில் நடந்து செல்லும் போது, வனப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதால் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கிராம புறங்களில் இரவு நேரங்களில் வனத் துறையினர் ரோந்து வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment