பாப்பிரெட்டிபட்டி கோழிமேக்கனூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முபாரக் வயது ( 50 )இவர் மஜீத் தெருவில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.
இந்த கடையில் நேற்று மதியும் தனது ரூ 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்துவிட்டு பாத்ரூம் செல்வதற்காக அருகில் உள்ள மசுதிக்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது செல்போன் காணவில்லை அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்த போது கடையின் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவர் திருடி இரருக்கலாம், எனக் கூறியுள்ளார்கள்.இதை அடுத்து அந்த வாலிபரை முபாரக் தேடிய போது பாப்பிரெட்டிப்பட்டி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் செல்போன் இருந்தது தெரியவந்தது இதை எடுத்து அவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அரூர் அடுத்த நம்பிப்பட்டியை சேர்ந்த உதயகுமார் 27 என்பதும் செல்போனை திருடியதும் உறுதியானது இதை எடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர் அவரிடம் இருந்த செல்போன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Comments
Post a Comment