50 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தலைமை செயலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
50 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தலைமை செயலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 50 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஊழியர்கள் மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் என தொடர்ச்சியாக மனு வழங்கி வந்தனர். இதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாரதிய புதுவை நியாய விலை கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தினர் தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தலைமைச் செயலகம் நோக்கி வந்தனர்.
அப்போது அவர்களை போலீசார் ஆம்பூர் சாலை அருகே தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்தனர் இதனை அடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குடிமைப்பொருள் வழங்கல்
துறையில் ஊழியர்களை இணைத்து சம்பளம் வழங்க வேண்டும். நேரடி பண பரிமாற்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 7 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என் மனம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Comments
Post a Comment