திராவிட மாணவர் சங்கத்தின் சார்பாக இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 04-11-2022 அன்று ஓசூர் மாநகர் ராம் நகரில் காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரித்தனர். இதில் பு.ஜ.தொ.மு கிருஷ்ணகிரி மாவட்டப் பொருளாளர் தோழர் சங்கர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஹிந்தி திணிப்பு என்பது தமிழ் மொழிக்கு மட்டும் எதிரானது அல்ல. அனைத்து தேசிய இனங்களுக்கும் எதிரானது.
இதை மொழி அழிப்பு என்று சுருக்கமாக பார்க்க கூடாது. இது நமது பண்பாடு, மரபு, விடுதலை போராட்ட வரலாறு அனைத்தும் அழிக்கின்ற சதிச்செயல்.
ஆகவே, இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை தேசிய மொழிகளுக்கும் எதிரானது. ஆகவே அனைத்து தேசிய இனங்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்பதை விளக்கி பேசினார்.
Comments
Post a Comment