சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில், பாஜவை கிண்டலடித்து ஒலிபரப்பப்பட்ட பாடலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாடலை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். சென்னை மாதவரத்தில் அண்மையில் பாஜ சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பாஜ தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது, பாடல் ஒலிபரப்பும்படி அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அதுவே அவர்களுக்கு ஆப்பாக அமைந்து விட்டது. பாடலை போட சொன்னால், பாஜவை வறுத்தெடுக்கும், கிண்டல் பாடல் ஒலிபரப்பப்பட்டது தான் ஹைலெட். அந்த பாடல் தாமரை மலர்ந்தே தீரும் என்று தொடங்கியது. தாமரை மலர்ந்தே தீரும். தாமரை மலர்ந்தே தீரும்.
மோடி சொன்ன ரூ.15 லட்சம் அக்கவுண்டிலே ஏறிடுச்சி.... அக்கவுண்டில் ஏறிடுச்சி.... பாஜ சொன்ன 2 கோடி பேருக்கு வேலையும் தான் வந்திருச்சி. வேலையும் தான் வந்திருச்சி.... வந்திருச்சி... என்று அந்த பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த பாடலை கேட்டு பாஜவினர் அதிர்ந்து போயினர். பாட்டை நிறுத்துப்பா என்று சிலர் மைக்செட்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நீ எதிர்க்கட்சிக்காரனா என்று அந்த மைக்செட்காரரிடம் ஆவேசப்பட்டனர் இதனால், அந்த நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த பாடல் தான் ஹாட் டாப்பிக்காக சமூக வலைத்தளங்களில் உருவாகியுள்ளது. அதாவது வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த பாடலை வறுத்தெடுத்து நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஏன்டா.. பாட்டை போட்டோம் என்று பாஜவினர் தற்போது நினைக்க தொடங்கியுள்ளனர்.
Comments
Post a Comment