கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது / 10.000 ஆயிரம் மதிப்பிள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல்


தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள  லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூபாய் 10.000 ஆயிரம் மதிப்பிள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து உள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள புதூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினை தொடர்ந்து விரைந்து சென்ற உத்தமபாளையம் போலீசார் சந்தேகம் படி நின்று இருந்த கம்பம் வாவா பள்ளி தெருவை சேர்ந்த முகமது ஹனிபா மகன் ஜாகிர் உசேன்(53) என்பவரை சோதனை செய்தலில் அவர் கேரளலாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள 227 கேரள லாட்டரி சீட்டுகளையும் ரூபாய் 1080 ரொக்க பணத்தையும் கைப்பற்றி கைது செய்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Comments