அரூர் அம்பேத்கர் நகரில் சூரிய கிரகணத்தை கண்டு கொள்ளும் விதமாக உரலில் உலக்கை வைத்து செங்குத்தாக நின்றதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்
அரூர் அம்பேத்கர் நகரில் சூரிய கிரகணத்தை கண்டு கொள்ளும் விதமாக உரலில் உலக்கை வைத்து செங்குத்தாக நின்றதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இன்று சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் மாலை 5; 15மணிக்கு ஆரம்பித்து 5:44 மணிக்கு இந்த சூரிய கிரகணமானது நிறைவடைந்தது. சூரிய கிரகணத்தை காண்பிக்கும் விதமாக அரூர் அம்பேத்கர் நகரில் உள்ள கலைமணி சுந்தரம்மாள் என்பவருடைய வீட்டின் முன்பு இருந்த உரலில் உலக்கையை வைத்து அங்குள்ள பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் சூரிய கிரகணம் குறித்து விளக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தின்போது உரலில் உலக்கையை வைத்தால் உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும் எனவும் கிரகணத்தின் போது மட்டும் தான் உரலில் உலக்கை நேராக நிற்கும் எனவும் கிரகணம் முடிந்த பிறகு தானாகவே ஆட்டுக்கல்லில் வைக்கப்பட்டுள்ள உலக்கை கீழே விழுந்து விடும் என விளக்கப்பட்டது. இதை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
Comments
Post a Comment