தேனியில் கஞ்சா வேட்டையில் சூப்பர் ஹீரோவாக வளம் வரும் உதமபாளையம் காவல்துறை !!உத்தமபாளையத்தில் கஞ்சா வழக்கில் இரண்டு பேர் கைது..
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த தங்கராசு மகன் படித்துறை(40)மற்றும்உத்தமபாளையம்தென்னஞ்சாலையை சேர்ந்த தண்டியல் மகன் சுரேஷ்(39) ஆகிய இருவரும் தென்னன்சாலையில் உள்ள கே.ஆர்.களத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக உத்தமபாளையம் காவல்ஆய்வாளர் சிலைமணி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா I.P.S தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கம்பம் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி தேவர் மகன் மலைச்சாமி(31) இவர்கள் இருவருக்கும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது .போலீசார் தேடுவதை அறிந்த மலைச்சாமி தலைமறைவானர். படித்துறை மற்றும் சுரேஷ் இருவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கரவாகனங்கள் நான்கு செல்போன்கள் கைப்பற்றப்பட்டு இருவரையும் கஞ்சா வழக்கில் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.தலைமறைவாக உள்ள மலைச்சாமியை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்று கஞ்சா கடத்துவர்கள் மீதும் விற்பனை செய்பவர்கள் மீதும் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்துவரும்
உத்தமபாளையம் காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர்
தேனி மாவட்ட நிருபர்
S. பாவா பக்ருதீன்
Comments
Post a Comment