அரூர் உட்கோட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

தருமபுரி

அரூர் உட்கோட்ட பகுதிகளில்  தொடர் கஞ்சா விற்பனையில் 
ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது 


தருமபுரி மாவட்டம் அரூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்
ஆப்ரேஷன் 2.O - தமிழகத்தில்
அதிரடியாக கஞ்சா வேட்டையில் காவல் துறை ஈடுபட வேண்டுமென டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் படி தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட பகுதியில் காவல் துறையினர் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். 

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதில் பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை  கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அரூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்

ஜாமீன் வெளிவந்த சின்னதுரை மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சின்னதுரையை அரூர் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா தலைமையிலான காவல் துறையினர் கண்காணித்து வந்த நிலையில்
கடந்த செப்டம்பர் மாதம் சின்னதுரை கஞ்சா விற்பனை செய்த போது பிடிபட்டார் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்

கஞ்சா விற்பனையால்
தருமபுரி மாவட்டம் அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதால் இதற்கு அடிமையான இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 
கஞ்சாவை முற்றிலும் தடை செய்யும் வகையில்
டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் படி கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த சின்னதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி , அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த குட்டையன் மகன் சின்னதுரை 
மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு ,
சின்னதுரை  என்பவரை
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.

Comments