#BREAKING#NEWSதேனி மாவட்டம் கம்பம் நகரில் பத்து நாட்களுக்கு முன்பு கொலை செய்து ஆற்றில் வீசிய வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர்.



சேர்ந்தவர் பிரகாஷ் (37) தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவரை

கடந்த பத்து தினங்களுக்கு முன்பு காணவில்லை என அவரது மனைவி கனிமொழி கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.



புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் அதே தெருவில் உள்ள ஆட்டோ டிரைவர் வினோத் குமார் (34) மற்றும் அவரது மனைவி நித்யா (25) இருவரும் சேர்ந்து

கழுத்தை இறுக்கி கொலை செய்து பிரகாஷின் உடலை ஆட்டோவில் தூக்கிச் செல்ல வினோத் குமாரின் நண்பரான ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பவரை அழைத்து மூவரும் சேர்ந்து பிரகாஷின் உடலை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்று கம்பம் அருகே உள்ள உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றின் ஆற்றுப் பாலம் பகுதியில் வீசியது தெரியவந்தது.



 அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் பிரகாஷின் உடலை முல்லைப் பெரியாறு ஆற்றுப்பகுதியில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீவிரமாக தேடிவந்தனர்.

கடந்த பத்து நாட்களாகியும் ஆற்றுப்பகுதியில் பிரகாஷின் உடல் கிடைக்காததால் இன்று முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதை நிறுத்திவிட்டு 
முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடியதில் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்று பகுதியில் அழுகிய நிலையில் கிடப்பது ஆண் பிணம் கிடப்பது தெரிய வந்தது.
உடனடியாக அவரது மனைவி கனிமொழியை அழைத்து பிரகாஷின் உடலை கையில் அணிந்திருந்த செம்பு காப்பு மூலம் அடையாளம் கண்டுபிடித்தனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments