4 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழங்கினார்.
தண்ணீர் பிரச்சனையை திமுக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயம் செழிக்கும் வகையில் ஏற்படும் செய்யும் என அரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்
தர்மபுரி மாவட்டம் அரூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு உட்பட்ட 1083 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இணையவழி இலவச வீட்டு மனை பட்டா பெரும் நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை துறை சார்ந்த இடுபொருட்கள், குடும்ப அட்டை பெரும் பயனாளிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் நலத்திட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளது எனவும் இதற்கு திமுக அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து விவசாயம் செழிக்கும் மையல் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
Comments
Post a Comment