அரூரில் விசிக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மூவேந்தன் தலமையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
சாலைகளில் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்ற மனித சங்கிலி
தமிழகத்தில் இன்று அக்டோபர் 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சமுக நல்லிணக்கத்தை பாதுகாக்க 17 கட்சிகளும் 44 இயக்கங்களின் சார்பில்
இன்று தமிழக முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் அரூரில்
சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில், விசிக, இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கைகளை கோர்த்தபடி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments
Post a Comment