திருவனந்தபுரம்: ‘பணம், அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜ சதி செய்கிறது,’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ‘இந்திய ஒற்றுமை நடை பயணம்’ தொடங்கிய ராகுல் காந்தி, தற்போது கேரளாவில் நடந்து வருகிறார். நேற்று காலை அவர் 10ம் நாள் நடைபயணம மேற்கொண்டார். மோடியின் பிறந்த நாளான நேற்று, காங்கிரஸ் அதை வேலையின்மை தினமாக அனுசரித்தது. மாணவர்களுடன் னான கலந்துரையாடலின்போது இது தொடர்பான கருத்துக்ளை ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார்.
நேற்று முன்தினம் நடை பயணத்தின் ஓய்வு நேரத்தில் ராகுல் காந்தியை புரட்சி சோஷலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரசில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி பாஜ.வில் இணைவது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ராகுல், ‘கோவா உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள், தலைவர்கள் விலகி செல்வது பாஜ.வின் திட்டமிட்ட சதியாகும். பணம், அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரசில் பாஜ திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது,’ என தெரிவித்தார்.
Comments
Post a Comment