நடக்க முடியாதவர் தட்டச்சு செய்பவர் வேலை இருந்தால் கொடுங்கள் சென்னை வாசிகளே! உதவி கேட்கிறார் உதவுங்கள் முடிந்தவரை பகிருங்கள்
அன்புள்ள ஜயா/ அம்மையீர்,
ஹோலோ சார் பாலாஜி வணக்கம், நான் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் நந்தம்பாக்கம் கிராமத்தில் வசிக்கின்றேன், நான் ஒரு மாற்றுத்திறனாளி, நான் மிகவும் ஏழ்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன், நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முடித்துள்ளேன், கணிப்பொறியில் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்துள்ளேன். எனக்கு வேலை எதுவும் இல்லை, குடும்பத்தில் என் அப்பா அம்மாவிற்கு நான் ஒரே ஒரு மகன் மட்டும்தான், அப்பா கூலி வேலை செய்கிறார், அம்மா இல்லத்தரசி, எனக்கு தேவை ஒரே ஒரு வேலை மட்டுமே, இப்போது எனக்கு எந்தவித வருமானமும் இல்லை, இப்போது எனக்கு ஒரு வேளை இருந்தால்தான் என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். என்னுடைய கைப்பேசி எண். 9514993182,
குறிப்பு. எனக்கு தெரிந்த வேலைகள் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட், ஆபிஸ் அசிஸ்டெண்ட், கம்ப்யூட்டர் ஸ்கேனிங், பைல் வேலை, writing work, despatch work, photocopy work, printout work, mail work, தமிழ் மற்றும் ஆங்கிலம் 45 வார்த்தைகளுக்கு மிகாமல் தட்டச்சு செய்வேன்,
எதிர்பார்க்கும் சம்பளம் 15000
location: சென்னை கிண்டி, தாம்பரம், போரூர், வடபழனி, குன்றத்தூர், கோவூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, அண்ணாநகர், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, மதுரவாயல், நெற்குன்றம்,
இந்த செய்தியை படிக்கும் ஐயா/அம்மையீர் மற்றும் நல் உள்ளங்கள் வேலை தந்து உதவினால் என் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும் ஏன்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன், தயவு செய்து வேலை தந்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடனும், பனிவன்புடனும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
இப்படிக்கு
ர.பாலாஜி
Comments
Post a Comment