தர்மபுரியில் ஒரு குறை இருக்கிறது நிச்சயம் அதை மாற்றுவேன் ! தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன்

தருமபுரி

முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!
அம்பேத்கார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஓராண்டுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு 
மேற்கு மாவட்ட செயலாளராக  பொறுப்பு வழங்கப்பட்டதுபொறுப்பேற்ற பிறகு இன்று தருமபுரி மாவட்டம் அரூர் திரும்பினார். 

அவரை  சந்திப்பதற்காக அரூர் பாப்பிரெட்டிப்பட்டி பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அரூர் வருகை தந்து பூங்கொத்துகள் கொடுத்தும் சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.
மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வரவேற்புக்காகநேற்று முதல் காலை வரை வரவேற்புக்கான முன்னேற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் செய்து வந்த நிலையில் இன்று காலை அரூர் பகுதியில் அண்ணா  மற்றும் அம்பேத்கார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக  பழனியப்பன் அரூர் வருகை தந்தார் அவர் வருகை தரும் முன்பே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒன்று கூடினர்

Comments