பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியை யாசர் அரபாத்தை என் ஐ ஏ அதிகாரிகள் விசாரனைக்கு அழைத்து சென்றதால் தேனியில் பரபரப்பு !!

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி  மதுரை மண்டல செயலாளர் யாசர் அரபாத்தை   இன்று அதிகாலை 3 மணி அளவில் என் .ஐ .ஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.இதனை அடுத்து கம்பத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள்பெண்கள் ஒன்றிணைந்து 30க்கும் மேற்பட்டோர்
கம்பம் சிக்னல் பகுதியில் மதியம் 1.30மணி அளவில்அச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாசர்அரபாத்தை விடுவிக்க கோரி மத்திய அரசைக் கண்டித்தும்   மற்றும் காவல்துறை கண்டித்தும் கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.இதனால் அச்சாலையில் அரை மணி நேரம் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர் இச்சம்பவத்தால் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Comments