தேனி சின்னமனூர் சாலையில் பழுது பார்க்கப்பட்ட லாரியை இயக்கும்போது மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் பழுதானது..!
தேனி மாவட்டம் சின்னமனூர் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான கனரக வாகனம் பழுது பார்க்கும் மையம் அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான டிப்பர் லாரிகள் பழுது பார்க்க வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழுது சரிசெய்த லாரியை ஓட்டுனர் எடுத்துள்ளார்.
அப்போது லாரியின் பின்பக்க பகுதியானது மின்சார கம்பியில் பட்டு வழு தாங்க முடியாமல் மின்கம்பம் உடைந்து.
இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போது லாரி மோதி மின் கம்பம் உடைந்தது தெரிய வந்தது.
உடைந்த மின் கம்பத்திற்கு அபராத தொகையை சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளரிடம் வசூல் செய்து புதிய மின்கம்பம் அமைக்கும் பணியை மின்வாரிய துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அப்போது புதிய மின் கம்பம் அமைப்பதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது சின்னமனூர் நகர் பகுதிக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் வெள்ளகாடாக காட்சி அளித்தது.
தனிநபர் ஒருவரின் அலட்சியப்போக்கால் சின்னமனூர் நகர் பகுதியில் மின்சாரம் மற்றும் குடிநீர் தடை ஏற்பட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதி மக்கள் இரண்டு நாட்களாக பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு நாட்களாக மின்தடை ஏற்படவும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காரணமாக இருந்த லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்ட நிருபர்
S. பாவா பக்ருதீன்
Comments
Post a Comment