பாப்பிரெட்டிப்பட்டி
அதிகாரப்பட்டியில் சுமார் நான்கு நாட்களாக துர்நாற்றம் வீசி வந்த நிலையில் இன்று காலை அருகில் உள்ள பொதுமக்கள் அதிகாரப்பட்டி கிராம உதவியாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்பட்டி கிராம உதவயாளர் வாசுகி அவர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் நேரில் வந்து கூரை வீட்டின் வாசலில் நின்று பார்க்கும் பொழுது தூக்கில் தொங்கியபடி கருகிய நிலையில் இருந்த உடலை கண்டு அ பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தனி பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு காவல் உதவி ஆய்வாளர் மாதையன் அவர்கள் விசாரணை செய்தார். விசாரணையில் குட்டி தாசன் என்கின்ற கிருஷ்ணன் நாயுடு மகன் ராஜ் வயது 60 தனது தாயின் சேலையில் தூக்கிலிடப்பட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இது பற்றி அ பள்ளிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment