இது சமத்துவம் பேசும் பெரியார் மண் - அதில் பாஜக மண்ணில் புதைந்த களிமண் ! தமிழ்நாட்டின் பாஜக அண்ணாமலை ஒரு காமெடி மேன் விடுதலைசிறுத்தைகள் கட்சி - ஜானகி ராமன் விமர்சனம்
இது சமத்துவம் பேசும் பெரியார் மண் - அதில் பாஜக மண்ணில் புதைந்த களிமண் அண்ணாமலை ஒரு காமெடி மேன்
விடுதலைசிறுத்தைகள் கட்சி - ஜானகி ராமன் விமர்சனம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைசேர்ந்த ஒன்றியசெயலாளர் எஸ் பழனி தலைமையில் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சாதி ஒழிப்பு போராளி, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்றி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சில் தருமபுரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டசெயலாளர் ஜானகிராமன் , கலந்துகொண்டு கொடி ஏற்றிவைத்தார்,இதில் சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழ அன்வர், மாநில இளைஞர் அணி செயலாளர் அதியமான் , பாப்பிரெட்டிபட்டி பேரூர் நகரசெயலாளர், மாயக்கண்ணன் துளசிவளவன், இரா சுபாஷ் மாவட்டதுனை அமைப்பாளர், பட்டுகோனாம்பட்டி முன்னாள் முகாம் பொறுப்பாளர்கள், மற்றும் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு பகுதியில் மோடியின் புகைப்படம் போட்டு வாழும்பெரியாரே என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க நிருபரின் கேள்விக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் கூறுகையில் அண்ணாமலை வடிவேலு காமெடி போன்று செய்துவருகிறார், மற்றும் பெரியார் சமூகப்போராளி கிடையாது மோடி தான் சமூகப்போராளி என்று எல் முருகன் கூறியது வேடிக்கையாக உள்ளது. அரசியல் தெரியாதவர்கள் பேசும் மாயலஜல வார்த்தைகள், உண்மையிலேயே மோடி ஒரு சமூகப்போராளி அல்ல சானதானபோராளி என்று அழுத்தமாக நினைவு படுத்துகிறேன். மற்றும் இது சமத்துவம் பேசும் பெரியார் மண் ! - பாஜக மண்ணில் புதைந்துகிடக்கும் ஒரு களிமண் ! என்று விமர்சனம் செய்துள்ளார்.
Comments
Post a Comment