பள்ளிக்கூடம் செல்லாமல் சுற்றி திரிந்த மாணவர்களை அறிவுரை கூறி பள்ளிக்கூடம் அனுப்பி வைத்த அ. பள்ளிப்பட்டி காவல்துறை !

Evidenceparvai.in
தர்மபுரி 

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
 இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் பள்ளிக்கூடம் செல்வதாக சொல்லிவிட்டு ஆங்காங்கே சுற்றி திரிவதாக அரூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா அவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அ பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து எச் புதுப்பட்டி,  அதிகாரப்பட்டி,  மூக்காரெட்டிப்பட்டி,  போன்ற பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் மது பழக்கத்திற்கும், புகைப் பழக்கத்திற்கும்,  அடிமையாகி வருகின்றனர்.  இதற்கு முதல் காரணம் அவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் சமூகத்தில் ஒரு சில நபர்களோடு பழக்கம் வைத்து இது போன்ற தீய பழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆகவே பள்ளிக்கூடம் செல்லாமல் சுற்றி திரியும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரப்பட்டி, மற்றும் மூக்கா ரெட்டிப்பட்டி, பகுதியில் படித்து வந்த மாணவர்கள் பள்ளிப்பட்டி, மற்றும் அதிகாரப்பட்டி, பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டும்,  அங்கே தவறுதலான செயல்களில் ஈடுபட்டதை கண்டு அ. பள்ளிப்பட்டி துணை காவல் ஆய்வாளர் மாதையன், அவர்களும், SI ஜெகதீசன், என்பவரும் சேர்ந்து அதிகாரப்பட்டி தலைமை ஆசிரியரை அழைத்து அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் தயவு செய்து எங்களுக்கு தகவல் கொடுங்கள் கண்டிப்பாக நாங்களும் உங்களுக்கு உதவுகிறோம். என்று அ பள்ளிப்பட்டி துணை காவல் ஆய்வாளர் மாதையன் அவர்கள் உறுதி அளித்தார்.  மற்றும் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கி அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால் அதிகாரப்பட்டி பகுதி வாழ் மக்கள் காவல் துறையை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

Comments