மதராஸ் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றி கோடிக்கணக்கான தமிழர்களின் துயர் நீக்கிய பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா - ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் பள்ளிமாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு தனது இதயத்தை இரவலமாக தந்து சென்ற தென்னாட்டு காந்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆசான்  மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றி கோடிக்கணக்கான தமிழர்களின் துயர் நீக்கிய 
 பேரறிஞர் அண்ணாவின்
114-வது  பிறந்த நாளை 
முன்னிட்டு ஒன்றிய கழக செயலாளர் திரு.பி.எஸ்.சரவணன்  மற்றும்
பேரூர் கழக செயலாளர் 
திரு கு.கௌதமன் ஆகியோர்  தலைமையில் 
பொ.மல்லாபுரம் பொம்மிடி இரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பிறகு பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள 
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு
 மாலை அணிவித்து
இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


இந்நிகழ்வில்
ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள்,  அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கிளை  வார்டு கழக நிர்வாகிகள், என அனைவரும் கலந்து கொண்டனர்.
மற்றும் பொ மல்லாபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Comments