கட்சி பேனரை கிழிங்கடா தமிழ்நாடு முழுவதும் பிரச்சனை பரவட்டும் ! திட்டம் கசிந்ததால் அசிங்கபட்ட பாமக !!!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் வருகையை ஒட்டி ஆங்காங்கே விளம்பர பதாகைகளும், பேனர்களும் ஒட்டப்பட்டது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக ஒன்றியச் செயலாளர் கார்த்திக் தமிழ்வாணன் என்பவன் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திலும் தருமபுரி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மர்ம நபர்கள் பேனரை கிழித்து விட்டதாகவும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார். சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் CCTV கேமராவை ஆராய்ந்ததில் மூன்று நபர்கள் காவல்துறையால் கைது செய்து விசாரிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ப. ம.கட்சியின் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தமிழ்வாணன் என்பவரின் பால்சென்டர் உதவியாளர்களான (1)மாது(25) த/குமார் ஜீவா நகர்,
(2) நவீன்(25) த/பெ தருமன் ஜீவா நகர்,
(3) ஷாஜகான்(24) த/பெ காதர் பாட்ஷா கோழிமேக்கனூர் என்பது தெரியவந்தது. அவர்களை விசாரணை செய்ததில் கட்சித் தலைமையின் உத்தரவின்படி கார்த்திக் தமிழ்வாணன் என்பவரின் கட்சி வளர்ச்சிக்காகவும், பரபரப்பை ஏற்படுத்தவும் அவர்களின் விளம்பரத்தை அவர்களே கிழித்து கொண்டு நாடகமாடியது அம்பலமானது.
காவல்துறை துரிதமாக செயல்பட்டு பாமக கட்சியினரே குற்றச் செயலில் ஈடுபட்டதை கண்டறிந்ததால் இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சாதிச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் லதா அவர்கள் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழியனுப்பி வைத்தது மாற்று கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருதலை பட்சமாக செயல்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் காவல்துறை தலைவர் அவர்களும் நேரடியாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments
Post a Comment