திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுப்புரத்தினம்(பழநி), அன்பழகன்(நிலக்கோட்டை), முன்னாள் மாவட்ட பொருளாளர் கோபால், நிர்வாகிகள் இமாகுலின், மணிகண்டன் உட்பட 500 நிர்வாகிகள் பெரியகுளத்தில் பன்னீர்செல்வத்தை சந்திந்து ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களை வரவேற்று பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் அமர்ந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க., என்பது மிகப்பெரிய சாதனை. ஜூன் 23 நடந்த பொதுக்குழு கூட்டம் எப்படி நடந்தது என அனைவருக்கும் தெரியும். நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை. அவை தலைவர் இல்லாத நிலையில் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேனை, ஒருங்கிணைப்பாளரான நான் முன்மொழிய வேண்டும்.

இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வழிமொழிய வேண்டும். இது தான் மரபு. நான் பேச ஆரம்பித்த போது கூச்சல், குழப்பம், ரவுடிகள் அட்டூழியம் என அவமரியாதை சூழ்நிலை உருவானது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களையும் ரத்து செய்வதாக கூறியது வரம்பு மீறிய செயல்' என்றார்.
Comments
Post a Comment