ஈரோட்டில் இன்று மாலை 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பா.ஜனதா பேரணி- அண்ணாமலை தொடங்கி வைக்கிறார்.

ஈரோடு: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மதியம் ஈரோட்டுக்கு வருகை தர உள்ளார். மதியம் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து தேசிய கொடியை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக நிர்வாகிகளுடன் செல்கிறார். இந்த ஊர்வலம் ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் தொடங்கி பெருந்துறை ரோடு வழியாக சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நிறைவடைகிறது. பின்னர் அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழாவை ஒட்டி சிறந்த நெசவாளர்களை கவுரவித்தும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், நடை பெற உள்ளது. இந்த விழாவுக்கு அண்ணாமலை தலைமை தாங்கி நெசவாளர்களை கவுரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வாங்குகிறார்.



Comments