இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே குடையத்தூர் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சோமன் என்பவரது வீடு அடித்துச் செல்லப்பட்டது. சோமனின் தாயார் தங்கம்மா, மகன் தேவானந்த் ஆகியோரது உடல்கள் இன்று(ஆக.,29) காலை மீட்கப்பட்டன. மாயமான சோமன், மனைவி ஷிஜி, மகள் ஷிமா ஆகியோரை தேடி வந்த நிலையில் அவர்களது உடல்களும் மீட்கப்பட்டன.
9 மாவட்டங்களுக்கு ‛‛எல்லோ அலெர்ட்''
மாநிலத்தில் இன்று இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் உள்பட ஒன்பது மாட்டங்களுக்கு பலத்த மழைக்கான எல்லோ அலெர்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
Comments
Post a Comment