சென்னை: சாமியார் நித்தியானந்தா, கடந்த 3 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் வீடியோவில் தோன்றி சொற்பொழிவாற்றினார். அப்போது, தான் அப்டேட் ஆகியுள்ளதாகவும், இது முற்றிலும் புதிய உடல் எனவும் நித்தியானந்தா தெரிவித்தார்.
சாமியார் நித்தியானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில், அவர் கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக அவரே கூறியிருந்தார். அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவு ஆற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். தான் சமாதி மனநிலையை அடைந்திருப்பதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் அவரே கூறியிருந்தார். இந்த நிலையில், நித்தியானந்தா ஜூலை 13ம் தேதி குருபூர்ணிமா நிகழ்வில் நிச்சயம் பக்தர்கள் மத்தியில் பேசுவார் என அவரது சீடர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று வீடியோ மூலம் நித்தியானந்தா சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இது முற்றிலும் அப்டேட்டான புதிய துவக்கம். 42 ஆண்டுகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட புதிய துவக்கத்தை எடுத்து வைக்கிறேன். கடந்த ஏப்ரல் 13 முதல் ஜூலை 13 வரையிலான 3 மாதங்களில் மொத்தமாக மாறி போயிருக்கிறது. என் உடல், மூளை என அனைத்தும் மாறி இருக்கிறது. 3 மாதங்கள் ஒரு யுகமாக கழிந்தது. இது என்னுடைய முற்றிலும் புதிய உடல். கைலாசாவும் அப்டேட் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Comments
Post a Comment