நீட் தேர்வு பயத்தில் அரியலூரில் மாணவி தற்கொலை


பெரம்பலூர்: அரியலூர் ரயில் நிலையம் அருகே நடராஜன்- உமா தம்பதியினரின் மகள் நிஷாந்தி(18) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர், கடந்தாண்டு +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில், தோல்வி அடைந்தார். இந்நிலையில், நாளை நடக்கவுள்ள இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மாணவி நிஷாந்தி தயாராகி வந்தார். வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாவும், தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் என கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வுக்காக நன்றாக படித்துள்ளேன். ஆனால் தோல்வி அடைந்து விடுவேனோ என பயமாக உள்ளது எனவும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

Comments