தர்மபுரி மக்களை போட்டா போட்டி போட்டு பலி வாங்குகிறதா ? திமுக- அதிமுக.! வேதனையில் பாப்பிரெட்டிப்பட்டி மக்கள்.!

தருமபுரி மாவட்டத்தில் தற்போது போக்குவரத்து பயணங்கள் அதிகரிக்கும் நிலையில்  அவ்வபோது பல்வேறு இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உறிய நேரத்திற்கு பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தாலும்  ஆம்புலன்ஸ் வருவதென்னவோ வெகுநேரம் கழித்துதான். 

இது போன்ற சூழலில் அதிக உயிரிழப்பு  ஏற்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் , வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள் என்று பல துறைகள் வளர்ச்சி அடைந்தாலும் அந்த ஊருக்கு அது பெருமையல்ல, அந்த மண்ணில் நல்ல மருத்துவ சேவை இருக்கவேண்டும் அதுதான் எந்த ஊருக்கும், பெருமை சேர்க்கும், காரணம் ஒரு உயிரை காப்பது மருத்துவத்தை தவிர வேறு எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட நிலை யாவரும் அறிந்ததே, தற்போதுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், அவர்கள் தமிழ்நாட்டில் எங்கு மருத்துவ வசதிகள் இல்லையோ உடனடியாக தகவல் தெரிவியுங்கள், அதற்கு உடனடியாக தீர்வுகாணப்படும் என்றார். ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள *மருத்துவமனைகளில் சரியாக மருத்துவரே இல்லை என்பதை அமைச்சரிடம் உயர் அதிகாரிகள் சொல்லிருப்பார்களா? வெண்டிலேட்டர் ஆம்புலன்ஸ் இல்லாமல் பல உயிர்கள் செத்து மடிகிறதே என்று உதவி கேட்டிருப்பார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனென்றால் இங்க நடக்கும் நிலமை அந்தமாதிரி..!

வெண்டிலேட்டர் ஆம்புலன்ஸ் தர்மபுரியில் எவ்வளவு இருக்கிறது என்று மாவட்ட மருத்துவ அதிகாரி டீன் திருமதி  அமுதவள்ளி அவர்களிடம் கேட்டபோது, ஆம்புலன்ஸ் பற்றி எனக்கு தெரியாது ஆம்புலன்ஸ் மேனேஜரிடம் கேளுங்கள் என்று தொடர்பை துண்டித்துவிட்டார்.  ஆம்புலன்ஸ் மேனேஜர் ராமன் கணி அவர்களிடம் கேட்டபோது வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் தர்மபுரி மாவட்டத்தில் எத்தனை உள்ளது சார் ?




வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் 2 தான் இருக்கு ? ஏன் சார் கேக்குறீங்க வண்டி தேவைப்படுதா என்றார் ராமன் கணி- சார் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஜூன் 9 ஆம் தேதி தமிழரசன் விபத்துக்குள்ளாகி  சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மற்றும் அவரோடு பயணித்த செவிலியர்  கவினிலவு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் இல்லாமல் 2 மணி நேரம் கழித்து அந்த செவிலியர் இறந்து போனது உங்களுக்கு தெரியுமா சார் என்று கேள்வி எழுப்பியுடன் ஐயோ சார் எப்போ சார் நடந்தது இந்த தகவல் எண்களுக்கு வரவில்லையே என ஆச்சர்யத்துடன் கேட்டார் ராமன் கணி... இந்த சம்பவம் நடந்தன்று பெண் மருத்துவர் கூறுகையில் ஒரு ஆம்புலன்ஸ் சர்வீஸ் போய்டுச்சு இன்னொரு ஆம்புலன்ஸ் வேற ஸ்பார்ட்டுக்கு போய்டுச்சுன்னு சொல்லிட்டாங்க... சேலத்திலிருந்துதான் வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் வரசொல்லிருக்குன்னு அந்த பெண் மருத்துவர் கூறினார். மிகப்பெரிய அளவில் விபத்து, மிக மிக அவசரம், என்ற நிலை இருக்கின்ற போதும் ஏன் நரம்பியல் மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள், சர்க்கரை நோய் மருத்துவர், இருதைய மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என முக்கியமான மருத்துவர்கள் ஏன் இங்கு பணியமர்த்தபடவில்லை. ஒரு தலுகாவிற்கு மருத்துவம் ரீதியாக என்னென்ன வசதிகள் வேண்டுமோ அந்த வசதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் 70 சதவீதம் கூட இல்லை, இதற்கு முன்னர் தர்மபுரி,  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்  அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், இருந்துள்ளனர். இவர்கள் மருத்துவம் ரீதியாக எந்த ஒரு நலதிட்டங்களும் செய்யவே இல்லை.என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.



ஜூன் 9 ஆம் தேதி நடந்த சம்பவத்தில் தோழி செவிலியர் நண்பர் தமிழரசன் விபத்தில் பலி


 மருத்துவ நிலமை???


பொம்மிடி அடுத்த சில்லாரஅள்ளியை கவிநிலா நர்சிங் படித்து முடித்துவிட்டு வேலைத்தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்டர்யூக்கு செல்ல  பூனையானூரை சேர்ந்த  தமிழரசன். என்கிற கவிநிலவின் நண்பருடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பொம்மிடி அடுத்த ஒட்டுப்பள்ளம் என்கிற இடத்தில் வந்துக்கொண்டிருந்த போது,  எதிரே வந்த கார் பைக் மீது மோதியது இதில் தமிழரசன் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்க ஆபத்தான நிலையில்  கவிநிலாவை  பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவிநிலாவை மேல்சிகிச்சைக்கு சேலம் அழைத்து செல்ல வென்டிலேட்டருடன் கூடிய ஆம்புலன்சுக்காக சுமார் 2 மணி நேரமாக கத்திருந்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் கவிநிலவும் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் கூறும் போது,  பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் இல்லாததால் பறிதாபமாக உயிர் போனது. இந்த நிலை தர்மபுரியில் பல்வேறு இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

MRK பன்னீர் செல்வம் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்

ஆகவே தற்போது தர்மபுரி மாவட்டத்திற்கு கூட்டுதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள MRK பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் கூட்டுதல் கவனம் செலுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் அவர்களிடம் 

மா. சுப்பிரமணியம் சுகாதாரத்துறை அமைச்சர்

எடுத்து கூறி இந்த பகுதி வாழ் மக்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உதவ வேண்டும் மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கு உதவவும் என்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் முக்கிய பொதுமக்கள்,  ஒன்றாக சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக ஆட்சி க்கு அவபெயர் ஏற்படுத்தும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மருத்துவத்திற்கு தேவையான வசதிகளை கேட்கவில்லையா ? இல்லை சட்ட மன்ற உறுப்பினர் அதிமுக கட்சியைசார்ந்தவர்  என போட்டா போட்டி போட்டு கொண்டு ஆளுங்கட்சியான    திமுக  கண்டுகொள்ளவில்லையா??? என பாப்பிரெட்டிப்பட்டி பகுதிவாழ் மக்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

கோவிந்தசாமி பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் அதிமுக

பாப்பிரெட்டிப்பட்டி  அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்களிடம் கேட்டபோது, இவர்கள் சொல்வதெல்லாம் காஷ்மீர் டூ கன்யாகுமரி வரை அளந்துவிடும் கட்டுக்கதை, நடந்த முடிந்த சட்ட சபையில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் டிஜிஒ ( மகப்பேறு மருத்துவர்) இருதைய மருத்துவர், டையாபெட்டிக் மருத்துவர், ( ஐ சி யூ குளிரூட்டப்பட்ட அறை ) 30 படுக்கறையாக உள்ளதை 60 படுக்கரையாக மாற்ற வேண்டும்  என்று கோரிக்கை வைத்துள்ளேன். முதலில் கோரிக்கை வைத்ததை நிறைவேற்ற சொல்லுங்கள், அதிமுக திட்டத்தில் கொண்டு வந்த திட்டத்தை அழித்து மூடிவிட்டனர். மக்களுக்கான ஆட்சி என்று சொல்லும் திமுக அரசு நான் கோரிக்கை வைத்த திட்டத்தை நிறைவேற்ற சொல்லுங்கள் பார்ப்போம், மக்களுக்காகத்தானே கேட்டேன் செய்யுட்டும். பாக்கலாம்..!!! என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.  மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில்  தர்மபுரி மாவட்டத்தைச்சார்ந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் பெ சுப்பிரமணி அவர்களிடம் கேட்டபோது " 

தடங்கம் P. சுப்பிரமணி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திமுக

ஆளுகின்ற கட்சியை எதிர் கட்சியாக இருந்தாலும், இல்ல நேத்து மொழைச்ச காளானா இருந்தாலும் இப்போ குறை சொல்ல ஆரம்பித்துவிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அமைந்த இந்த அரசு ஒருபோதும்  எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை ஒதுக்கியது கிடையாது. அப்படிபட்ட அறுவெறுப்பான அரசியலை சென்ற ஆட்சியில் வேண்டுமென்றால் பார்த்திருக்க முடியும். எங்கள் ஆட்சியில் நடக்காது. மக்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரிடம் கேட்டால் நிச்சயம் அதற்கான நடவடிக்கைகளை செய்து முடிப்பார். திமுக அரசு மீது குற்றம் சாட்டும் இவர்கள்  10 ஆண்டு ஆட்சி செய்தது அதிமுக அரசுதான் அப்போ மக்களுக்கு தேவையானதை செய்யாம  இவங்க கோமா ஸ்டேஜ் ல இருந்தாங்களா ?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக எத்தனை அரசு மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து முடித்தது. எல்லாமே செய்தோம் என்று வாயால் வேண்டுமென்றால் வடை, போண்டா,  சுடலாம். ஆய்வு மேற்கொண்டு பார்த்தால் 10 சதவீதம் கூட தேராது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவம், கல்வி,  குடியிருப்பு, குடிநீர், பேருந்து, வேலைவாய்ப்பு, போன்ற இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளோம். என்று தனது கருத்தை பதிவு செய்தார் தடங்கம் சுப்பிரமணி.


 எந்த ஆட்சியாக இருந்தாலும்,  எது எப்படியோ மீண்டும் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாதவாறு, அரசியல் தலைவர்களும், பொதுமக்களும், தலைமைக்கு கொண்டு செல்வது அனைவருடைய கடமை. அதுமட்டுமல்லாமல் சம்பந்தபட்ட உரிய அதிகாரிகள் தங்களது கவனத்தில் எடுத்துக்கொண்டால் மக்களுக்கும் அவர்களது பணிக்கும் நன்மையே..!!!

Comments