Skip to main content
கஞ்சா விற்பனை செய்த போலீஸ் ! கைதிகளோடு கம்பி என்னும் நிலை !
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக எஸ்.பி.ஆசிஸ்ராவத்திற்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி. தலைமையில் கடந்த ஒரு வாரமாக விசாரணை மேற்க்கொண்டனர் விசாரணையில் , எருமாடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி போலீசாக பணியாற்றி வந்த அமரன்( 24), சேரம்பாடியில் தங்கியிருந்த அறையில், கடந்த சில நாட்களாக இவரது நண்பரான தேனி மாவட்டத்தில் போலீசாக இருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணேசன் என்பவர் தங்கியிருந்துள்ளார். அதே அறையில் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணியாற்றிய உடையார் (26) என்பவரும் தங்கியிருந்துள்ளார்.
இதில் கணேசனுக்கும், கஞ்சா மொத்த வியாபாரிகளுக்கும் தொடர்பு இருந்துள்ளது. கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து மொத்தமாக, வாங்கி வரும் கஞ்சா விற்பனையர்களுடன் கை கோர்த்த சஸ்பெண்ட் போலீஸ், கணேசன் கஞ்சாவை கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்துள்ளார்.
போலீஸ் அமரன் தபால் கொடுக்கவும், எஸ்.பி. அலுவலகம் செல்லும்போதும், போலீஸ் போர்வையில் கஞ்சாவை எடுத்து சென்று, கணேசன் கூறும் நபர்களிடம் கொடுத்து வந்துள்ளார். இது குறித்து தகவல் தெரிந்தும், இன்ஸ்பெக்டர் டிரைவர் உடையார் தகவலை தெரிவிக்காமல் இருந்துள்ளதும் தெரிய வந்தது. அதனையடுத்து போலீசார் கணேசன், அமரன், உடையார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கணேசன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்,அவர் தலைமறைவானார். மற்ற இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அமரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment