ரியல்மி நிறுவனம் நோட்புக் ஏர் (Realme NoteBook Air ) என்ற தனது புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டைலான தோற்றமும், குறைந்த எடையையும் உடைய இந்த லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ மட்டுமே என கூறப்படுகிறது. பொதுவாகவே வாடிக்கையாளர்கள் குறைந்த எடைகொண்ட எளிதாக கையில் எடுத்துச்செல்லும் வகையிலான லேப்டாப்பையே விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த லேப்டாப் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் என தெரிகிறது. ரியல்மி ஸ்மார்ட்போன்களைப் போலவே இந்த நோட்புக் ஏர் லேப்டாப்பும் மெல்லிசான தோற்ற அமைப்பை உடையது. அதாவது, ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் மிகவும், மெல்லிசானது. இதன் அளவு 4.9 எம்.எம். ஆகும். மேலும் முக்கியமான சிறப்பம்சம், இதிலுள்ள மெல்லிய பெசில்கள் தான். மேலும், ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ளது.
இது உள்ளடக்கிய சிறப்பம்சங்கள் என்னவென்றால், 11-வது ஜென் கோர் i3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் உடைய இந்த லேப்டாப், 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. இதன் 16:10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனில் சிறப்பான பிச்சர் குவாலிட்டி கிடைக்கும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை (Screen to Ratio) கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 54Whr திறன் கொண்டதாகும். 13.5 மணி நேரம் பேட்டரி பேக்கப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதன்மூலம், 30 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்யும் என்று கூறுகிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35,300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 8ஜிபி + 512ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.38,800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, இந்த லேப்டாப் தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
Comments
Post a Comment