சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றக்கோரிய வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி அன்று நடந்த மோதல் தொடர்பான வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (ஜூலை 15) ஒத்திவைத்தது.
கடந்த 11ம் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க., பொதுக்குழு நடந்தது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர்; கட்டையால் தாக்கினர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்பகுதியே போர்க்களமாக மாறியது. கல் வீச்சில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.மோதல் தொடர்வதை தடுக்க, அப்பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி, 'சீல்' வைக்கப்பட்டது. தலைமை அலுவலகத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிசாமி, பன்னீர்செல்வம் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு, இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி, ஆவணங்களை எடுத்து சென்றனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லை. 400 பேர் முற்றுகையிட்டு எங்களை தடுத்தனர். இரு தரப்பு மோதல் முற்றியதால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது எனக்கூறினார்.
அப்போது, அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா என நீதிபதி கேட்டதற்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என பதிலளித்தார்.
போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக்கூறுவது தவறு என்றார். இதற்கு நீதிபதி, பழனிசாமி தரப்பு ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முடித்த உடன் போலீஸ் விளக்கமளிக்கலாம் என்றார்.
தொடர்ந்து, பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மோதல் ஏற்பட்ட போது அதை தடுக்காமல், போலீசார் அமைதி காத்ததற்கான ஆதாரம் உள்ளது.வீடியோ ஆதாரங்கை ளபார்த்தால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தது தெரியும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் தவறிவிட்டனர்.அலுவலக சொத்தை பொறுத்தவரை அதன் உரிமை அதிமுக.,விடம் உள்ளது. கட்சி விதிகளின்படி தலைமை நிலைய செயலாளர் தான் அலுவலகத்தின் பொறுப்பாளர் .
கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற பன்னீர்செல்வம் தரப்பினரை போலீசார் தடுக்கவில்லை. எதிர்க்கட்சியின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது ஜனநாயக விரோதம். உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லாத போது சீல் வைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரிடம் ஒப்படைக்க அதிமுக அலுவலகம் தனி நபரின் சொத்து அல்ல. பன்னீர்செல்வம் தற்போது ஒருங்கிணைப்பாளர் அல்ல. கட்சியில் இருந்து நீக்க தீர்மானமும் நிறைவேற்றி உள்ளோம் என்றார். பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கட்சி அலுவலகத்திறகுள் எந்த தடையும் இல்லை. வானகரத்தில் இருந்த பழனிசாமி சரிபார்ப்பும் இல்லாமல் குற்றம்சாட்டி உள்ளார். பொருளாளர் என்ற முறையில் அதிமுக அலுவலகத்திற்கு பன்னீர்செல்வம் சென்றதாக கூறினார்.

இதனை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி நடந்த மோதல் தொடர்பான வீடியோ பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
Comments
Post a Comment