பழனிசாமியும் பன்னீர்செல்வமும் எங்களுக்கு ஒன்றுதான்: அமைச்சர்

வேலூர்: வேலூரில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக அலுவலகம் சீல் வைப்பு என்பதில் பன்னீர் செல்வமும் எங்களுக்கு ஒன்று தான். பழனிசாமியும் ஒன்றுதான். எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பின்பற்றப்படவில்லை. கவர்னர் சனாதன தர்மம் பற்றி பேசுகிறார் என்றால் அவர் சனாதனவாதி. இவ்வாறு அவர் கூறினார்

Comments