இலங்கையின் வீழ்ச்சி: குறைந்த வரி, திடீர் இயற்கை விவசாயம் காரணம்!

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டிய சமயத்தில், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு வரிகளை பெருமளவு குறைத்தது, திடீரென ரசாயண உரங்களுக்கு தடை விதித்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றியது ஆகிய இரண்டும் அழிவுப்பாதைக்கு வித்திட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதாரக் கொந்தளிப்பில் உள்ளது. அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால் அத்தியாவசியமான எரிபொருள் மற்றும் உணவு போன்றவற்றை இறக்குமதிக்கு செய்ய முடியாமல் திணறுகிறது. பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வெகுண்டெழுந்து உயர் பாதுகாப்பு கொண்ட அதிபர் மாளிகை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீடு போன்றவற்றிற்குள் நுழைந்தனர். ரணில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.

என்ன தான் பிரச்னை?



latest tamil news


இலங்கை அரசுக்கு சுமார் 4 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டு பொருளாதாரத்தின் அச்சாணியான சுற்றுலாத் துறை ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் மற்றும் கோவிட்டால் முற்றிலும் முடங்கியது. இதனால் அரசால் வாங்கிய கடனையும் திருப்பி அடைக்க முடியவில்லை, வட்டியும் கட்ட முடியவில்லை. டாலர் கையிருப்பு குறைந்தது. இலங்கையின் ரூபாய் மதிப்பு 80 சதவீதம் சரிந்தது.

இதனால் இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்க நேரிட்டது. ஏற்கனவே கட்டுப்பாட்டில் இல்லாத விலைவாசி இதனால் மேலும் உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலை 57% அதிகரித்தது. இதன் விளைவாக, பெட்ரோல், பால், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய பணம் இல்லாமல், திவால் நிலையை நோக்கி தள்ளியது.


சொந்தமாக உணவை விளைக்கு அரசு ஊழியர்கள்



latest tamil news



காலணா சம்பளம் என்றாலும் கவர்மென்ட் உத்தியோகமாக இருக்க வேண்டும் என கிராமங்களில் சொல்வார்கள். இலங்கை அரசு ஊழியர்களின் நிலைமையும் பரிதாபகரமாக உள்ளது. கூடுதலாக 3 மாதங்களுக்கு அவர்களுக்கு விடுமுறை அளித்து, தங்களுக்கான உணவை தாங்களே விளைவித்துக்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர். எந்த அளவிற்கு உணவுப் பஞ்சம் இலங்கையை வாட்டி வதைக்கிறது என்பதற்கு இது உதாரணம். ஐ.நா.,வின் உலக உணவுத் திட்டம் இலங்கையில் 10ல் 9 குடும்பங்கள் மதிய உணவைத் தவிர்ப்பதாக கூறுகிறது. 30 லட்சம் மக்கள் உணவின்றி அவசர உதவியினை பெறுகிறார்கள்.


நிலைக்கு என்ன காரணம்?பல ஆண்டுகளாக நடந்து வந்த தவறான நிர்வாகம், ஊழல் போன்ற உள்நாட்டு காரணிகளால் இந்த நெருக்கடி உருவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 2019ல் ஈஸ்டர் அன்று இலங்கையின் ஓட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான சுற்றுலாவை நாசமாக்கியது. இலங்கையில் பயணம் செய்ய வெளிநாட்டவர்கள் அஞ்சினர். சுற்றுலா வருவாய் அடி வாங்கியது.


யின் ஓட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தாகுதல் நடத்தினர். அதில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான சுற்றுலாவை நாசமாக்கியது. இலங்கையில் பயணம் செய்ய வெளிநாட்டவர்கள் அஞ்சினர். சுற்றுலா வருவாய் அடி வாங்கியது. அடுத்ததாக சீனாவால் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை கடன் வாங்கி மேற்கொண்டனர். கடன் அதிகரித்ததால் அரசு தனது வருவாயை பெருக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்மாறாக பொருளாதார புலி ராஜபக்சே இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய வரிக் குறைப்புகளை மேற்கொண்டார். இதனால் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பெறுவதற்கான தகுதியை இழந்தது இலங்கை. அதன் பின்னரே சமீபத்தில் பழையபடி வரி விதிப்பை மேற்கொள்கின்றனர்.


ராஜபக்சே செய்த மற்றொரு தவறு திடீர் இயற்கை காதலராக மாறி ஏப்ரல் 2021ல் ரசாயன உரங்களின் இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்தார். இயற்கை விவசாயம் மேற்கொள்ள சொன்னார். இயற்கை விவசாய முறைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நெற்பயிர்கள் எல்லாம் நாசமாகின. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை எகிறியது. போதாக்குறைக்கு ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுடன் போரிட கச்சா எண்ணெய், உணவு விலை மேலும் ஏற்றம் கண்டு இலங்கை பொருளாதாரத்தை வாரிச் சுருட்டியது.


அரசு என்ன செய்கிறது!



latest tamil news


இலங்கை அரசு நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறது. இந்தாண்டு செலுத்த வேண்டிய 700 கோடி டாலர் கடன் தவனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அதற்கு ஓரளவு உதவுகிறது. இலங்கை நிதி அமைச்சக தகவல் படி 2.5 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால் இறக்குமதிக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.எம்.எப்.,வை கடைசியாக நம்பி உள்ளனர்.

அவர்களிடமிருந்து கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இலங்கையின் அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற நாட்டு அரசுகளும் சில ஆயிரம் கோடி உதவித்தொகை வழங்கின. இந்தியாவைப் போல் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கவும் முயற்சிக்கின்றனர்.

Comments