சென்னை : மேயர் பிரியாவை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி, மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன். இவர் தற்போது, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலராக உள்ளார். இவர் சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் படங்கள் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் ராதாகிருஷ்ணன் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி போலி கணக்கு துவங்கி பண மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகத்திற்கு ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
Comments
Post a Comment